25th March 2019 11:30:32 Hours
221 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கேர்ணல் பிரியந்த காரியவஷம் அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுக்கு பின்பு தனது கடமையை பொறுப்பேற்றார்.
முன்னர் இருந்த படைத் தளபதியான பிரிகேடியர் டீ.பி.யூ குணசேகர அவர்கள் 142 ஆவது படைத் தலைமையகத்திற்கு மாற்றமானதையிட்டு புதிய படைத் தளபதி இராணுவ ஊடக பணிப்பகத்தின் கேர்ணல் ஊடகம் பதவியிலிருந்து 221 ஆவது படைத் தலைமையகத்தின் 7 ஆவது புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி 2 ஆவது (தொண்டர்) கஜபா படையணியினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. பின்னர் படைத் தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்று அனைத்து படை வீரர்களது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 2 கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 6 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.latest Running Sneakers | Sneakers