22nd March 2019 13:10:24 Hours
தெஹியோவிட்ட பியதிஸ்ஸ நாயக்க தேரர், வடக்கு, கிழக்கு பிரதான சங்கநாயக தேரரும் திருகோணமலை, சீனக்குடா ஶ்ரீ போதிராஜராமய ஆனந்த மஹா விகாரை, திமுதுகம சமுத்ரசன்ன விவேகராமய, விளம்குளம திவுல்வெவ ராஜ மஹா விகாரையில் தேரராக விளங்கிய இவர் சிறு தினங்களுக்கு முன்பு காலமானார்.
இவரது இறுதி மரணச் சடங்கு கிரிகைகள் (22) ஆம் திகதி மாலை திருகோணமலையில் அமைந்துள்ள மெக்கயிஷர் மைதானத்தில் இடம்பெறும்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் பிரதான தேரர்கள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் , முப்படை மற்றும் பொலிஸாரது பங்களிப்புடன் இவரது மரண இறுதி கிரிகைகள் இடம்பெறும்.
22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.என்.பீ வீரசிங்க அவர்களது பூரன ஏற்பாட்டுடனும் முப்படையினரது கௌரவ மரியாதையுடன் இவரது மரணச் சடங்குகள் இடம்பெறும்.
பியதிஸ்ஸ நாயக்க தேரர் 1980 ஆம் ஆண்டு திருகோணமலை சீனக்குடா ஶ்ரீபோதிராஜராமய விகாரைக்கு வருகை தந்தார். ரம்புக்கன ஶ்ரீ சத்தாலங்கார நாயக தேரர் அவர்கள் இந்திய சமாதானப் படையணி கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
கிழக்கில் எல்டிடிஈபயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை நிலைநாட்டி அனைத்து மத தலைவர்களுடனும் நல்லுறவை வளர்த்து வந்தாரென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE