Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2019 23:21:25 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு கணக்காய்வு தொடர்பான விழிப்புணர்வு

இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திரு எச்.எம் காமினி மற்றும் பிரதி கணக்காய்வு பணிப்பாளர் திரு ஜி.ஏ.எம்.ஐ குணரத்ன அவர்களால் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயலமர்வு இலங்கை படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணிப்பாளர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்த கணக்காய்வு உயரதிகாரிகள் வருகை தந்து இந்த ஒரு நாள் விழிப்புணர்வை நடாத்தி வைத்தனர்.

இந்த செயலமர்வில் 2018 இல 19 கீழ் புதிய கணக்காய்வு தொடர்பான விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, பாதுகாப்பு படைத் தளபதிகள், லொஜஸ்டிக் தளபதிகள், படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதிகள், இராணுவ பணிப்பாளர்கள் உட்பட் 300 இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

மேலும் இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டப்ள்யூ. ஆர் பல்லிகக்கார, இராணுவ கணக்காய்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜித் பெரேரா அவர்களின் முழுமையான ஏற்பாடு மற்றும் பங்களிப்புடன் இந்த செயலமர்வு இடம்பெற்றன. Best Sneakers | Nike Shoes