Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2019 17:39:33 Hours

சிங்க படை நீச்சல் வீரர்கள் சாம்பியனாக தெரிவு

நீச்சல் விளையாட்டு துறையில் படையினருக்கு உத்வேகம் வழங்கும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இன்று காலை 7 மணியலவில் கல்கிஸ்ஸ கடற்கரையில் படைகளுக்கிடையிலான மூன்றாவது இரண்டு மைல் தூர திறந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியானது 235 நீச்சல் வீரர்கள் மற்றும் 12 நீச்சல் வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கபபட்டன.

இலங்கை இராணுவ நீச்சல் விளையாட்டுக் குழுவின்; ஏற்பாட்டிலும் மேஜர் ஜெனரல் இன்ட்;ராஜித வித்யானந்த அவர்களின் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல்சவேந்திர சில்வா, இலங்கை இராணுவ (தொண்) படையணி தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டைஸ், இரணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் வீரசிங்க, பொதுக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்டன, மற்றும் அதிகாரிகள் ஏனைய படைவீரர்களுக்கான நிருவாக தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ். ஏடிபொல போன்றபலர்கலந்து கொண்டனர்.

மேலும் இப்போட்டியில் இலங்கை சிங்க படையணியானது சாம்பியனாக தெரிவு செய்யப்பட்துடன் கஜபா படையணியானது இரண்டாம் இடத்தையும் சுவீகரித்து கொண்டதோடு மகளிர் நீச்சல் போட்டியில் 1 இலங்கை இராணுவ மகளிர் படையணிhனது சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 4இலங்கை இராணுவ மகளிர் படையணியானது இரண்டாம் இடத்தையும் சுவீகரித்து கொண்டது.

ஆண்களுக்கான போட்டியில் கஜபா நீச்சல் படையினர் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதோடு 1 இலங்கை இராணுவ மகளிர் படையணியானது சவால் கிண்ணத்தை வென்றது. 3இலங்கை படைக்கள சிறப்பணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எ.எம.எ.எஸ். அபேசிங்க இப்போட்டியின் சிறந்த நீச்சல் வீரராக தெரிவு செய்யப்பட்டதோடு 4(தொண்) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்;த கோப்ரல் ஆர்.கே. ஜயதிலக சிறந்த நீச்சல் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

நடன காட்சியின் மூலம் அலங்கரிக்கபபட்ட இந்நிகழ்சியின் இறுதியில் வெற்றியாளர்கள் வெற்றி கிண்ணங்கள் கேடயங்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி இராணுவத் தளபதியினாலும் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளினாலும் கௌரவிக்கப்பட்டனர். url clone | Womens Shoes Footwear & Shoes Online