Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2019 15:46:09 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருடன் உரையாடல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் 11 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 10 ஆவது கஜபா படையணிக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை கடந்த மாதம் (28) ஆம் திகதி மேற்கொண்டார்.

முதலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள 10 ஆவது கஜபா படையணிக்கு வருகை தந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியை அந்த படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ருவன் எகலபொல அவர்கள் வரவேற்றார். பின்னர் படைத் தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி குருக்கள் மடத்தில் அமைந்துள்ள 11 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை அந்த படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சந்திகா எகலபொல அவர்கள் வரவேற்றார் பின்பு படைத் தளபதியினால் அந்த படைத் தலைமையக வளாகத்தினுள் மாங்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி காரைதீவு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்து கொண்டார். Sports brands | Nike Running