Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2019 13:24:28 Hours

கிளிநொச்சி இராணுவத்தினரால் நன்கொடைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களின் வழிக்காட்லின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 663ஆவது படைப் பிரிவு, 66 ஆவது படைப் பிரிவு மற்றும் 661ஆவது படைப் பிரிவு 1ஆவது கஜபா படையணி 20ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியினரின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ விக்னேஸ்வரா கல்லூரி, பரந்தன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் முக்கம்பன் அரசு தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஜெயபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 600 சோடி ஷூக்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள; போன்றன கடந்த (16) ஆம் திகதி சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வானது கிளிநொச்சி பிரதேசத்தில் வாழும் பொதுமக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவில் வசிப்பவரான கலிபோர்னியாவின் அறக்கட்டளையின் பணிப்பாளரும்மான திரு. அரவிந்தன் விஜய் அவர்களால் சில லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள நன்கொடைகள; வழங்கப்பட்டன.

மேலும் இந் நன்கொடை வழங்கும் நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனத்தின் பிரதிநிதி திரு காமினி வானசிங்க அவர்கள் கலந்து கொண்டதுடன் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் மங்கல விஜேசுந்தர, 662ஆவது மற்றும் 663ஆவது படைப்பிரிவு படைத்தளபதி, கட்டளை அதிகாரிகள் கிராம சேவக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட் அனைவரும் கலந்து கொண்டன.

இந்த நன்கொடைகள் இப் பிரதேசத்தின் அந்தந்த கிராம சேவாக அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. Nike footwear | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ