26th February 2019 17:00:11 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் 66 வது படைப்பரிவின் 663 வது படையின் கீழ் சேவை புரியூம் 2 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியானது ஸ்ரீ சித்தார்த அமைப்பின் வென் தலகல ஸ்ரீ சுமனரட்டன நாயக்க தேர அவர்களின் நிதி உதவியுடன் ஜயபுரம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டிற்கான தொழிநுட்ப மற்றும் பொறியியல் மற்றும் திறன் உதவியினை வழங்கியது.
மேலும், குறித்த குடும்பத்தின் தேவையினை அறிந்து கொண்ட 663 வது படையின் கீழ் இயங்கும் 2 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியானது மனிதாபிமானமான உதவிக்கான பரிந்துரையினை மேற்கொண்டன. அதன்பிரகாரம், தலகல சித்தார்த அமைப்பினால் 457500 செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய வீடானது 16 ஆம் திகதி சனிக்கிழமை உரிய குடும்பத்திடம் கையளிக்கப்பட்டன.
66 வது காலாட் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மங்கள விஜய சுந்தர, 663 வது படைத் தளபதி, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர்கள் இணைந்து பயனாளிக்கான வீட்டுத் திறப்பினை கையளித்ததோடு, இந் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிள்ளைகளின் தாயாரான திருமதி. சதிஷ்கரன் சரஸ்வதிக்கு வீட்டுப் பொருட்கள் உள்ளடங்களான ஒரு பொதியும் வழங்கப்பட்டன.
குறித்த இந்நிகழ்வானது இந்து கலாச்சார முறைப்படி குறித்த குடும்பத்தின் உறவினர்கள் சிரேஷ்ட குடியினர் மற்றும் ஒரு சில பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. Adidas shoes | Women's Nike Superrep