Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th February 2019 10:03:55 Hours

கஜபா படையினரால் சேனபுரவில் அங்கவீனமுற்ற படையினருக்கான புதிய நீச்சல் தடாகம் கையளிப்பு

கஜபா படையணியில் சேனபுர எனும் பிரதேசத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினருக்கான சிகிச்சை முறைக்கான புதிய நீச்சல் தடாகமானது கடந்த சனிக் கிழமை (23) வழங்கப்பட்டது. மேலும் இந் நீச்சல் தடாகமானது இவர்களின் உள நலனை கருத்திற்கொண்டு வைத்திய சிகிச்சை முறைகளை இவ் அங்கவீனமுற்ற படையினருக்கு வழங்கும் நோக்கில் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இப் புதிய சிகிச்சை முறைக்கான நீச்சல் தடாகமானது கஜபா படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க யங் லங்கா எனும் நிறுவனத்தின் தலைவியான திருமதி ஷெஹானி பியசேன அவர்களின் நன்கொடையின் மூலம் இப் புதிய சிகிச்சைக்கான நீச்சல் தடாகம் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன் கஜபா படையணியின் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அங்கவீனமுற்ற கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜானக விதானாச்சி போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது வட மத்திய மாகான ஆளுனரான கௌரவமிக்க அமைச்சர் சரத் ஏகநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியவர்களால் வரவேற்கப்பட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஆளுனர் மற்றும் இராணுவத் தளபதியவர்களால் இப் படைத் தலைமையகத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினர்களை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கவீனமுற்ற படையினருடன் இவர்கள் கலந்துரையாடி நலனை விசாரித்தனர்.

மேலும் இந் நிகழ்வில் ஆளுனர் இராணுவத் தளபதி கஜபா படையணித் தளபதி கஜபா படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்சன் யங் லங்கா எனும் நிறுவனத்தின் தலைவியான திருமதி ஷெஹானி பியசேன போன்றோர் கலந்து கொண்;டதுடன் இப் புதிய நீச்சல் தடாகத்தை திறந்து வைத்தனர். மேலும் அங்கவீனமுற்ற படையினருக்கான அமைக்கப்பட்ட இந் நீச்சல் தடாகமானது 25மீற்றர் நீளத்தைக் கொண்டதும் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காணப்படுகின்றது.

அத்துடன் இராணுவத் தளபதியவர்கள் யங் லங்கா எனும் நிறுவனத்தின் தலைவியான திருமதி ஷெஹானி பியசேன அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன் போது படைத் தளதபதிகள் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் பல உயர் அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பிரதேசவாசிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியானது தாய் நாட்டிற்காக 35 வருடங்களாக பல தியாகங்களைப் புரிந்துள்ளது. மேலும் மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய பயங்கரவாதத்தின் போது பல தியாகங்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது அங்கவீனமுற்ற படையினருக்காக படையணியை கஜபா படையணியானது 1994ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதியன்று நிறுவியது. Sports brands | Women's Designer Sneakers - Luxury Shopping