Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2019 16:42:50 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகளுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் தரத்திலுள்ள உயரதிகாரிகள் நால்வர் (11) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்துள்ளனர். இவர்களது பதவி உயர்வு நிமித்தம் இராணுவ தளபதி தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்தனர்.

புத்தள இராணுவ அதிகாரி தொழில் துறை வளர்ச்சி மையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன, 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும, 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக போன்ற உயரதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டு இராணுவ தளபதியை இராணுவ தலைமையகத்தில் தந்தித்தனர்.

இறுதியில் இந்த உயரதிகாரிகள் இராணுவ தளபதியுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தனர்.Sportswear free shipping | NIKE AIR HUARACHE