22nd January 2019 19:44:29 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போதை ஒழிப்பு தொடர்பான பிரச்சாரம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் முல்லைத்தீவு வித்தியானந்த வித்தியாலயத்தில் (21) ஆம் திகதி காலை இடம்பெற்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவுகள் உள்ள பிரதேசங்களில் உள்ள 70 பாடசாலைகளில் உள்ள 18,168 மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விரிவுரைகள் மற்றும் துண்டுப் பிரசரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அன்றைய தினமே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவரர்களினால் இராணுவத்தினரிடம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள் மற்றும் உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரது மூன்று பண்ணைகள் உள்ளடங்கிய 1201.88 ஏக்கர் நிலப்பரப்புக்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு இந்த நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவும் இணைந்திருந்தார்.
பின்பு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் இந்த காணிப் பத்திரங்கள் ஆளுனர் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு கையளித்து வைக்கப்பட்டன.
இந்த காணி விடுவிப்பின் போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 972 ஏக்கர்களும், முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 120 ஏக்கர்களும், யாழ் மற்றும் வன்னி பிரதேசங்களில் இராணுவத்தினர் பராமரித்து வந்த பண்ணைககள் உள்ளடக்கிய 46.11 ஏக்கர்களும், யாழ்ப்பாணம் வன்னி மாவட்டங்களில் உள்ள பொது மக்களது 63.77 ஏக்கர் நிலபப்பரப்பு காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டது.
இவற்றிலே நாச்சிக்குடா, வேளாங்குளம் மற்றும் உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள இராணுவ பண்ணைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் த லைமையகத்தின் கீழ் இயங்கி வந்தது.
தேசிய பாதுகாப்புத் தேவைகளில் எந்த தாக்கத்தையும் தாங்கிக்கொள்ளாத பொதுமக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வடக்கு மற்றும் கிழக்கு நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலலியினால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களது பாரிய ஒத்துழைப்புடன் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி திட்டம் நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பீடத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஆரம்பித்த இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபன 'ஏர்த் வாட்ச் மென்' மரம் வளர்ப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது பாரிய ஒத்துழைப்பை வழங்கி வைத்தது. Running Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov