22nd January 2019 22:56:51 Hours
இராணுவத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது நலன்புரி நிமித்தம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி இனாமலுவையிலுள்ள படைப் பிரிவுத் தலைமையகத்தில் இராணுவத்தினரது நலன்புரி நிமித்தம் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை (22) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைத்தார்.
இந்த படைப் பிரிவில் இராணுவ உயரதிகாரிகளுக்கான இளைப்பாறும் விடுதிக்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. 3 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியினால் இந்த கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டன. இந்த கட்டிடங்கள் நிர்மானிப்பதற்காக 15.3 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது.
அதனைப் போல் படை வீரர்களது நலன்புரி நிமித்தம் இந்த படைப் பிரிவு வளாகத்தினுள் 7.9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி நிலையமும் இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதி படை முகாமில் இருந்த இராணுவத்தினர் அனைவருக்கும் உரையையும் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Authentic Sneakers | New Balance 991 Footwear