Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2019 21:04:10 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் பசறை பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட சன்முகரத்தினம் மகா வித்தியாலயம் மற்றும் கலவெட்டிதிடல் நாகேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கருக்கதீவு மகா வித்தியாலயம், பரந்தன் இந்து மகா வித்தியாலயம், கிரஞ்சி அரச தமிழ் கலவன் பாடசாலை வெலிப்பாடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, வெரவைல் இந்து பாடசாலை போன்ற பாடசாலைகளில் தேர்தெடுக்கப்பட்ட 533 மாணவர்களுக்கு கொழும்பு நெத் எப்எம் ஊடக வலையமைப்பினால் கடந்த (17) ஆம் திகதியன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தக பைகள் நன்கொடைகளாக வழங்கப்பட்டன.

அதற்கமைய நன்கொடையாளர்களால் வழங்கிய நிதியுதவிக்கு நன்றி.

அதற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்;டளை தளபதி மேஜர ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்களின் ஆலோசனைக்கமைய 57ஆவது படைப் பிரிவு மற்றும் 66ஆவது படைப் பிரிவின் படையினரின் ஏற்பாட்டில் கிராம சேவக அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நன் கொடைகள் வழங்கப்பட்டன.

மேலும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில், தொலைதூர பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 190 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பசறை ரணுகல மகா வித்தியாலயத்தில் கடந்த (17) ஆம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந் நன்கொடைகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி அவர்களின் ஒருங்கமைப்பில் நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் குழுவினரால் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன. Sports Shoes | Men's Footwear