Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

513 ஆவது படையினரின் உதவியுடன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை

51 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 513 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் கடந்த (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மற்றும் (08) ஆம் திகதி சனிக் கிழமை பொதுமக்களின் நலன் கருதி வட்டுக்கோட்டை மருத்துவமனை மற்றும் காரைநகர் சுப்ரமணியம் கல்லூரியில் மொபைல் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.

அதன்படி 51 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய இப் பரிசோதனையானது இப் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் சிவில் மக்களுக்கு உதவும் நிமித்தம் இந்த மொபைல் கண் பரிசோதனை ஒழுங்கமைக்கப்பட்டன.

இப் பரிசேதனைக்காக கொழும்பு ரொட்டரி சங்கம் (Colombo Rotary Club) தினரால் அனுசரனை வழங்கப்பட்டது.அதற்கமைய அவுஸ்ரேலியாவில் குலோபல் ஹேன்ட் மில் பொயின்ட் ரொடரி கழகத்தின் (Australia’s Global Hand Mil Point Rotary Club) சிறப்பு கண் பரிசோதனையாளர் 12 பேர்களும் 3 வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.

இப் பரிசேதனைக்காக 1180 க்கும் அதிகமான சிவில் மக்கள் கலந்து கொண்டதுடன் வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனைகளும் பெற்றுக் கொண்டனர். affiliate link trace | Sneakers