Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2018 18:05:33 Hours

இராணுவத்தினருக்கு போதைவஸ்து தடுப்பு தொடர்பான செயலமர்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ எகடமி டோச் சினிமா சாலையில் இராணுவத்தினருக்கு போதைவஸ்து தடுப்பு தொடர்பான செயலமர்வு திங்கட் கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலின் படி 111 ஆவது படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரியான மேஜர் ஆர்.கே கருணாநாயக அவர்கள் போதைவஸ்து தடுப்பு தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இந்த விரிவுரையின் போது மதுபாணம், போதைவஸ்து தொடர்பான தெளிவூட்டல்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன. ஏராளமான இராணுவத்தினர் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | Sneakers Nike Shoes