Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2018 08:05:39 Hours

மேன்மை தங்கிய சனாதிபதியினால் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முப்படைகளின் முனைஞரும் சோசலிசக் குடியரசின் மேன்மை தங்கிய சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இராணுவத்தில் பிரிகேடியர் தர பதவியிலுள்ள 5 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்குத் 34 கெப்டன்கள் மேஜர் பதவிக்கும் (29) அம் திகதி வெள்ளிக் கிழமை தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் ஆதரவு, காலாட்பணி அல்லது சேவை ஆயுதங்கள் அல்லது போரில் பணியாற்றும் போது, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாராட்டுக்குரிய பாத்திரங்களை வகித்து, பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு சேவையை புரிந்த அதிகாரிகளாவர்.

இலங்கை போர் கருவி படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எச்.ஜி.ஐ வித்யானந்த அவர்கள் கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதியாக தற்பொழுது கடமை வகிக்கின்றார். இச் சமயத்தில் இவர் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார். இவர் இதற்கு முன்பாக இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை தளபதியாகவும், இராணுவ போர் கருவி பணிப்பாளராகவும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கேர்ணல் ஏ.கியூ பதவியில் தனது கடமைகளை வகித்துள்ளார்.

இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டி.ஜே நாணயக்கார அவர்களது தற்பொழுது 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக பதவி வகிக்கும் இச் சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார். இதற்கு முன்பாக 56, 54 ஆவது படைத் தளபதியாகவும், இராணுவ ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராகவும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானியாகவும், மன்னார் பிரதேச தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், படையணியின் படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார்.

கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் D.M.W.W.W.M.R.B.M தவுலகல அவர்கள் தற்பொழுது இராணுவ ஆட்சேர்ப்பு பணியகத்தில் பணிப்பாளராக கடமை வகிக்கும் இச் சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பிரதான பதவி நிலை தரத்திலும், 681, 58, 61, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகித்துள்ளார்.

இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.கே திருநாவுக்கரசு தற்பொழுது இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளராக கடமை வகிக்கும் இச் சந்தர்ப்பத்தில் இவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் ஒருங்கினைப்பு பணிப்பாளராகவும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானியாகவும், 55, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார்.

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பி.ஆர் வணிகசூரிய தற்பொழுது 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக தற்சமயத்தில் கடமை வகிக்கும் சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பதாக பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் தலைப்பு பயிற்றுனராகவும், 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ பேச்சாளாகவும் கடமை வகித்துள்ளார்.

Best Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov