29th June 2018 13:14:54 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (28) ஆம் திகதி வியாழக் கிழமை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள அம்பாறையிலுள்ள போர் பயிற்சி பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் தர்மசிரி கஹபொல மற்றும் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் உதய சேரசிங்க அவர்கள் வரவேற்றனர். பின்பு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
இராணுவ தளபதி இந்த முகாமினுள் புதிதாக உடற்பயிற்சி சாலையொன்றையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல, 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இணைந்திருந்தனர்.
இராணுவ தளபதி படையினர் மத்தியில் உறையையும் நிகழ்த்தினார். அதன் பின்பு படையினருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
bridge media | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival