Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2018 18:39:41 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மனிதாபிமான திட்டத்தின் கீழ் உதவிகள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எம்பிலிபிடிய ஶ்ரீ போதி ராஜா மன்றத்தின் தலைவர் ஓமல்பே சோபித நாயக தேரர் அவர்களது அனுசரனையுடன் மனிதாபிமான திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் வருமானம் குறைந்த குடும்பத்தினரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி முல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் ஊடாக முல்லைத்தீவில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு 100 பசுமாடுகளும், 50 சக்கர நாற்காலிகளும், பாடசாலை மாணவர்களுக்கு 150 பாடசாலை உபகரண பார்சல்களும், மரக்கன்றுகள் மற்றும் மண்வெட்டிகள் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அனுசரனையாளர்களின் உதவியுடன் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மற்றும் ஓமல்பே சோபித நாயக தேரர் அவர்களின் பூரண ஒத்துழைப்புடன வெளிநாட்டு அனுசரனையாளர்களின் 5.5 மில்லியன் நிதி உதவியுடன் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கிராமசேவக உத்தியோகத்தரின் முழுமையான மேற்பார்வையில் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இதற்கு முன்னரும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள், மருந்துகள், துவிச்சக்கர வண்டிகள், புலமைப் பரிசுகள், மரக்கன்றுகள், மரக்கறிகள், பழவகைகள் இப்பிரதேச மக்களுக்கு 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பொசன் தினத்தன்று இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுனர் மதிப்பிற்குரிய ரெஜினோல்ட் குரே அவர்கள் வருகை தந்தார்.

மேலும் ஓமல்பே சோபித நாயக்க தேரர், அனைத்து சமய தலைவர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரன், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்ன, முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, தாய்லாந்து, சிங்கப்பூர் அனுசரனை பிரதிநிதிகள், கல்வி, விவசாயம், சுகாதார பணிப்பாளர்கள், பாதுகாப்பு படையினர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Running sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK