Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2018 17:09:29 Hours

ஓய்வு பெற்ற காலஞ் சென்ற இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தருக்கு யாழ்படையினரால் கடைசி மரியாதைகள்

யாழ் உரும்பிராய் - கிழக்கு சிவத் மாவத்தையை சேர்ந்த ஓய்வூ பெற்ற காலஞ் சென்ற ஆனைச்சீட்டு உத்தியோகத்தரான எஸ் பி குருசுமுத்துவின் இறுதிச் சடங்கானது (26) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவரது பூதவுடல் எடுத்து செல்லப்பட்டதுடன் உரும்பிராய் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அத்துடன் இறந்தவரின் வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டனர்.

ஓய்வு பெற்ற காலஞ் சென்ற ஆனைச்சீட்டு உத்தியோகத்தரான எஸ் பி குருசுமுத்து அவர்கள் 1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து தனது ஓய்வுதியம் வரை 1 ஆவது பொறியியலாளர் படையணியில் பணியாற்றினார்.

இவரின் சேவை கௌரவப்படுத்தும் நிமித்தம் இலங்கை இராணுவத்தில் தீர்க சேவை பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல் இவர் தற்போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க யாழ்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார்.

இலங்கையின் யுத்த முடிவின் போது மனிதாபிமான நடவடிக்கைகளில் தமது முழ ஒத்தழைப்பையும் வழங்கினார். ஓய்வு பெற்ற ஆனைச்சீட்டு உத்தியோகத்தரான எஸ்.பி குருசுமுத்து அவர்கள் 22 வருட சேவையின் பின் ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற காலஞ் சென்ற ஆனைச்சீட்டு உத்தியோகத்தரான எஸ் பி குருசுமுத்து அவர்களுக்கு இறுதிச் மரியாதை வழங்க யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Sneakers Nike Shoes