Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2018 15:09:29 Hours

முப்படையினர் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் போத்ஹயா புனித யாத்திரை பின்னர் நாடு திரும்பினர்

இராணுவ தளபதியினால் இந்திய இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த புனித யாத்திரையின் பின் முப்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் (26) ஆம் திகதி நாடு திரும்பினர்.

இப் புனித யாத்திரையிற்கு இலங்கை இராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 82 பேர் உட்பட முப்படை மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது பங்களிப்புடன் மொத்தமாக 160 பேர் கலந்து கொண்டதுடன் இந்த யாத்திரையில் 03 நாள் பயணமாக (ஜூன் 24 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை) போத்ஹயா மற்றும் புனித இடங்களை வணங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் நட்பான வேண்டுகோளுக்கு பதிலலிக்கும் நோக்குடன் இந்திய இராணுவ உயர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் பீஜின் ராவிட் அவர்களின் என்னக்கருவிற்கமைய இந்திய இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் யாத்திரையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஒழுங்கமைத்து கொடுக்கப்பட்டனர்.

இந்திய இராணுவத்தினரால் இவர்களின் யாத்திரைக்காக வகான வசதி, உணவு தங்கும் இட வசதி, மற்றும் அனைத்து வசதிகளுடன் இலவசமாக விமான வசதிகளையும் வழங்கினர்.

மேலும் இந் யாத்திரையானது இந்திய-இலங்கை இராணுவ கலந்துரையாடலின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டதுடன், இந்தியாவிலுள்ள பெளத்த யாத்திரைக்காக சென்ற இராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான வசதிகளை வழங்கினர்.

இந்தியாவின் பொளத்த யாத்திரை முடிவின் பின் நாடு திரும்பிய இவர்களை வரவேற்பதற்காக கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு இராணுவ அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.Sports brands | Men’s shoes