28th March 2018 10:00:17 Hours
முன்னாள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் ஓய்வுற்றதையிட்டு 52 ஆவது புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நியமிக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து இராணுவத்தின் இரண்டாவது தர உயர் நிலையில் இருக்கும் இராணுவ அதிகாரியாவார். மேலும் இவர் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும் ஆவார்.
இவர் 1983 ஆம் ஆண்டு 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நித்திய படையணியில் கெடெற் அதிகாரியாக 18 ஆவது பயிற்சி நெறியை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி லெப்டினன்ட் தரத்திற்கு உயர்வு செய்து கெமுனு படையணியில் இணைந்தார்.
தற்பொழுது 34 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்து பதவிநிலை அதிகாரி 11, 521 படைத் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், இராணுவ உளவியல் நடவடிக்கை பணிப்பாளர், இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு பதவி நிலை அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரலாகவும், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆலோசனை அதிகாரியாவும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டளை அதிகாரியாகவும் , மாதுறுஒயா இராணுவ பயிற்சி பாடசாலையில் கட்டளை தளபதியாகவும் மற்றும் பிரதி பதவி நிலை பிரதானியாகவும் இராணுவத்தில் பதவி வகித்துள்ளார்.
மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் 23, 65 ,54 533மற்றும் 512 ஆவது படைப் பிரிவு மற்றும் படைத் தலைமையகங்களில் கட்டளை தளபதியாகவும் 8 மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியில் கட்டளை அதிகாரியாவும் கடமை வகித்துள்ளார்.
இவர் சிறந்த விளையாட்டு வீரராவார். இவர் கந்தான த மெசனட் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.
Nike Sneakers Store | Nike