Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 09:21:18 Hours

கிளிநொச்சி மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி மாவட்டங்களில் குறைந்த வருமானங்களை பெற்றுவரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 300 பேருக்கு புதிய வங்கி கணக்கு புத்தகம் திறந்து வைத்து பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (17) ஆம் திகதி சனிக் கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு மக்கள் வங்கியின் பிரதான கிளை மற்றும் பௌத்த சங்கத்தின் பிரதான செயலாளர் பிரிதி கொலொன்ன உட்பட மற்றைய அங்கத்தவர்களது அனுசரனையுடன் இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்த பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள், சித்திரை கொப்பிகள், கணித உபகரணங்கள், பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் தேவையான பொருடகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மேலும் ‘சிசு உதான’ வங்கி கணக்கு புத்தகங்கள் திறந்து இம்மாணவர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்பட்டன.

இந்த புத்தகங்கள் திறந்து வைப்பதற்காக கிளிநொச்சி குரு ஹாட்வெயார் நிர்வாகி மற்றும் கிளிநொச்சி மக்கள் வங்கியின் முகாமையாளர் முழுமையான அனுசரனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி ,கொழும்பு மக்கள் வங்கி கிளை மற்றும் பௌத்த சங்கத்தின் பிரதான செயலாளர் பிரிதி கொலொன்னகே அவர்கள் வருகை தந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன, மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தின் பொருளாளர் லகிரு செனரத் மற்றும் இந்த சங்கத்தின் அங்கத்தவர்களான பிரவின் மகேஷ் மற்றும் ரசன் சம்பத், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

best Running shoes | Sneakers