Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2018 16:24:05 Hours

51ஆவது படையினரால் முதியோர் இல்லம் மற்றும் கிராமவாசிகளுக்கும் உணவு வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவதுபடப்பிரிவிற்கு கீழ் இயங்கும் 513ஆவது படைப்பிரிவின் 18ஆவது (தொண்டர்) சிங்க படையினர் யாழ் சன்டிலிபாய் பிரதேசத்தில் உள்ள கல்வெலி முதியோர் இல்லத்தில்வசிக்கும் 50 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்.

இதேபோல் 512ஆவது படைப்பிரிவின் அனைத்து படையினரும் ஒன்றிணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் வாழும் சிறுவர்களில்தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்வழங்கினார்கள்.அதன்படிஇப்படைப் பிரிவின் கீழ் இயங்கும் 2ஆவது (தொண்டர்) காலாட்படையினரால் 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரைக்கமைய 51 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி>511அவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 15ஆவது (தொண்டர்) இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் யாழ் இருப்பாலை பிரதேசத்தில்உள்ள ‘ஞானம்’ சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்கு சிறுவர் திரைப்படம் பார்ப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன.

Running sneakers | Sneakers