26th January 2018 18:50:02 Hours
இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமராகிய லீ சியென் லுன்க் அவர்களை வரவேற்கும் நிகழ்வு (23) ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இலங்கை இராணுவத்தின்பீரங்கிப் படையினரது அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்றது.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த சிங்கப்பூர் பிரதமரை இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் ஜனாதிபதி செயலக நுழைவாயில் வைத்து வரவேற்றுச் சென்று ஜனாதிபதியின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த இராணுவ அணிவகுப்பு மரியாதைகளில் இரண்டு அதிகாரிகள் மற்றும் 72 இராணுவ வீரர்கள் இணைந்திருந்தனர். அத்துடன் ஜனாதிபதி வர்ணங்களை ஏந்திய வண்ணம் ஒரு இராணுவ அதிகாரியும் மூன்று படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
கௌரவ பிரதமருக்கான 19 மரியாதைப் பீரங்கி வேட்டுகள் இடம்பெற்றன.
இந்த அணிவகுப்பு மரியாதையின் பின்பு இலங்கை பாதுகாப்பு படையிலுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கலாச்சார நிகழ்ச்சி இடம்பெற்றது.
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Nike sneakers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov