26th January 2018 19:00:02 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (25)ஆம் திகதி வியாழக்கிழமை கேப்பாபிலவு பிரதேசத்தில் புதிதாக குடியேரிய பொதுமக்களது குடிநீர் கிணறுகள் இராணுவத்தினரால் சுத்திகரிக்கப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ரஜாகுரு அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் பொதுமக்களது 12 குடிநீர் கிணறுகள் முதலாவதாக விடுவிக்கப்பட்ட 24 ஏக்கர் காணிகளில் இருந்து இந்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவத்தினரால் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை இராணுவத்தினரால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 133.4 ஏக்கர் நிலப்பரப்பு உத்தியோக பூர்வமாக அரசாங்கத்திற்க கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இராணுவத்தினரால் பயண்படுத்தப்பட்ட 28 வீடுகள் இப்பிரதேசத்தின் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
jordan release date | Nike News