20th January 2018 17:42:55 Hours
கொழும்பு டொரிங்கடன் மைதானத்தில் இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜுடோ போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஜுடோ விளையாட்டு வீரர்கள் தங்கம் இ வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களது பாராட்டுகளையூம் பெற்றுள்ளதுடன் இராணுவத் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வூம் (19) காலை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்களை விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க அவர்கள் வரவேற்றார்.
அந்த வகையில் வெற்றியாளர்கள் இராணுவ ஜுடோ சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் ஷாந்த தெஹிவத்த மற்றும் இதன் செயலாளரான லெப்டினன்ட் கேர்ணல் சுமேத விஜயகோண் அவர்களின் மற்றும் பிரதம அதிதியின் தலைமையில் பரிசில்களைப் பெற்றக் கொண்டதோடு இராணுவ ஜுடோ சங்கத்தின் 100 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளடங்களானோர் தமது ஜுடோ விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில் இராணுவத் தளபதியவர்கள் இவ் வீரர்களின் எதிர்காலதிற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியதுடன் சிறந்த வெற்றியைப் பெறுவதற்காக இவ் விளையாட்டு வீரர்கள் இடைவிடாது பயிற்சிகளைப் பெறல் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில் இராணுவத்தினரின் 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜுடோ போட்டிகள் டிசெம்பர் மாதம் 20 - 21ஆம் திகதிகளில் 350 விiளாயட்டு வீரர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
அந்த வகையில் இராணுவ விளையாட்டுப் பணிப்பகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இராணுவத் தளபதியவர்களின் வருகையோடு வெள்ளிக் கிழமை இடம் பெற்ற இந் நிகழ்விற்கு இதுவே முதல் முறையாக இராணுவத் தளபதியவர்களின் வருகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் போது இராணுவத் தளபதி உள்ளடங்களான விiளாயாட்டு வீரர்களது குழுப் புகைப்படமும் இதன் போது எடுக்கப்பட்டது.
மேலும் 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜுடோபோட்டிகள் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமையில் உலகலாவிய ரீதியில் உள்ள 80 விளையாட்டுக் கழகங்களை முன்னிலைப் படுத்தி 350ற்கும் மேற்பட்ட ஆண் பெண் ஜுடோ போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவமானது 57.5 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றதுடன் இலங்கை கடற் படையானது 43.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி 44.5 புள்ளிகளைப் பெற்று வென்றுள்ளதுடன் இலங்கை பொலிஸ் படையணி 14 புள்ளிகளைப் பெற்ற இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் இவ் போட்டிகளில் இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் லான்ஸ் கோப்பிரல் ஜெ எம் என் சில்வா சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் ஜுடோ விளையாட்டு வீரர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
url clone | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff