19th January 2018 15:53:46 Hours
இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று நேபாள இராணுவத் தளபதி (COAS) ஜெனரல் ராஜேந்திர சேத்திரி அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் வெள்ளி;க் கிழமை (19) காலை வேளை முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொழும்பு – 07 இல் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்த நேபாள இராணுவத் தளபதியவர்களை கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வரவேற்றதுடன் இவ்விரு நாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் ஆசியாவின் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேம்படுத்தல் தொடர்பான கருத்தையும் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இந் நிகழ்வின் இறுதியில் நேபாள இராணுவத் தளபதியவர்களால் (ஊழுயூளு) நல்லிணக்கம் மற்றம் ஒருமைப்பாட்மை மேம்படுத்தும் நோக்கில் மதிப்பிற்குறி ஜனாதிபதியவர்களுக்கான விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கியுள்ளார்.
இலங்கைக்கான நேபாள துhதரகத்தின் உயர் ஸ்தாணிகரான வைத்தியர் எச் , பிஷ்வமட்பீர் பியக்குரல் , இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் மற்றும் நேபாள இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் ஜனாதிபதியவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அதேவேளை நேபாள ஜெனரல் ராஜேந்திர சேத்திரியவர்கள் COAS கடற் படைத் தளபதியான வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்களுடனான விசேட சந்திப்பொன்றை இன்று காலை (19) மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் இவ்வாறு கடற் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்ந நேபாள ஜெனரல் அவர்களை கடற் படையினர் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர்.
மேலும் கடற் படைத் தளபதியவர்களுடனான விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பலவாறான விடயங்கள் பற்றி பேசப்பட்டதோடு இவ்விருவருக்குமிடையிலான நினைவுச் சின்னங்களும் வழக்கப்பட்டன. அத்துடன் ஜெனரல் ராஜேந்திர சேத்திரியவர்கள் கடற் படைத் தளபதி மற்றும் பணிப்பாளர்களுடனான குழுப் புகைப்படத்திலும் கலந்து கொண்டார்.
Running sports | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1