Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd November 2017 12:15:18 Hours

புதிய கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியவர்கள் பதவியேற்பு

இராணுவ விதிகளுக்கமைவாக சமய அனுஷ்டானங்களோடு கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (2) பதவியேற்றார்.

இவரின் பதவியேற்பை முன்னிட்ட இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் போன்றன கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

மேலும் இவரது பதவியேற்பை முன்னிட்டு புதிய தளபதியவர்களால் மங்கள விளக்கேற்றல் இடம் பெற்றதுடன் பதவியேற்புப் புத்தகத்தில் இவர் கையொப்பமிட்டார்.

மேலும் இப் படைத் தலைமையகத்தில் மரநடுகையையும் புதிய தளபதியவர்கள் மேற்கொண்டார்.

இப் படையினருக்கான தமது எதிர்கால கருத்தை புதிய தளபதியவர்கள் தெரிவித்தார்.

அந்த வகையில் 23ஆவது படைத் தலைமையகத்தில் சேவையாற்றிய இவர் முன்னய தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீவ அவர்களது பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

Running Sneakers Store | adidas NMD Human Race