03rd November 2017 18:44:52 Hours
மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இராணுவப் பெண் அதிகாரிகள் இருவர் மேற்கொள்ளவுள்ளனர்.
அந்த வகையில் மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளில்(MINUSCA) கண்காணிப்பு அதிகாரிகளாக (MILOBS) கலந்து கொள்ளவூள்ள இவர்கள் இராணுவத் தளபதியவர்களின் ஆசியைப் பெறும் நோக்கில் இன்று (3)இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க அவர்களைச் சந்தித்தனர்.
ஆந்த வகையில் ஒரு வருடகால இச் சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் சார்பாக கலந்து கொள்கின்ற முதல் இரு பெண் இராணுவ அதிகாரிகள் இவர்களாவர்.
மேலும் இவ் அதிகாரிகளாக இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் திஷ்ந்தி மென்டிஸ் மற்றும் இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியைச் சேர்ந்த நிஷ்ந்தி லியணகே போன்றௌர் காணப்படுகின்றனர்.
இதன் போது இவ் அதிகாரிகளக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதியவர்கள் இவை ஓர் பொண்ணான வாய்ப்பாக உள்ளது எனவும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற சில பெண் அதிகாரிகளையூம் சமாதான நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் அருண முகைந்திரம் மற்றும் இலங்கை இராணுவ மகளிர்ப் படையணித் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் தில்ருக்ஷ் முனசிங்க போன்றௌரும் கலந்து கொண்டனர்.
ஆந்த வகையில் இலங்கை இராணுவமானது ஐக்கிய நாடுகளின் சமாதான நடடிக்கைகளுக்கான பயணத்தை 1995ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் கொங்கோ பிரதேசத்திற்குறிய விஜயத்தை மேற்கொண்டது.
ஆதில் 16அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழுவினர் காணப்பட்டதுடன் 1960ஆம் ஆண்டு இச் சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு நிறைவுற்றது.
Nike air jordan Sneakers | Nike SB