Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2017 15:44:12 Hours

மருத்துவ நிபுனர்களால் வாழ்கையின் அர்த்தம் எனும் தலைப்பில் கருத்தரங்கு

இராணுவ உளநல பணிப்பகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கானது விஜயபாகு காலாட் படையணி மற்றும் விசேட படைப் பிரிவுகளைச் சேர்ந்த படைப் பிரிவுத் தலைமையகங்களின் படையினருக்காக கடந்த 11-12ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது இராணுவ வீரர்களின் உள நலனைக் கருத்தில் கொண்டு வாழ்கையின் அர்த்தம் எனும் தலைப்பின் கீழ் மது போதைக்கு அடிமையாதலில் இருந்து மீளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இக் கருத்தரங்கு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ உளவியல் நிபுனரான வைத்தியர் ஆர் எம் எம் மொனராகலை ,உயர் உளவியலாளரான லெப்டினன்ட் கேர்ணல் ஏ டி சி ஆரியரத்தின , வைத்தியர் புண்ணிய ஹிரிபிட்டிய மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் உளவியல் பிரிவின் வைத்தியர்கள் போன்றௌறும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 12 இராணுவ் அதிகாரிகள் மற்றும் 290 படை வீரர்கள் போயங்கப் பிரதேசத்தில் இடம் பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதுடன் வவுணியாவில் இடம் பெற்ற கருத்தரங்கில் 06 இராணுவ் அதிகாரிகள் மற்றும் 140 படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

Mysneakers | Footwear