Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2017 07:49:54 Hours

கூட்டுப் படைப் பயிற்ச்சிகளின் விசேட திறமைகளை வெளிக் காட்டிய கொமாண்டோ படையினர்

ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் இடம் பெற்ற கூட்டுப் படைப் பயிற்சிகளின் ஓர் அங்கத்தில் தமது விசேட திறமைகளை இராணுவ கொமாண்டோ படையினர் இன்று (19) பிற்பகல் வெளிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் இப் பயிற்சிகளின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது தலைமையின் கீழ் 48பேர் உள்ளடங்கிய ஆறு குழுக்களைக் கொண்ட இவர்கள் பயணக் கைதிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இப் பயிற்சிகள் இரு விதங்களில் இடம் பெற்றது.

அவை விமான முறைகள் மற்றும் கட்டிட முறைகள் போன்ற விதங்களில் இராணுவ கொமாண்டோ ) போன்ற படையினரால் இக்கட்டான சூழ்நிலைகளின் போது வாகனத்தை எவ்வாறு கட்டிடங்கள் மற்றும் விமானத்தளங்களில் பயன்படுத்துதல் தொடர்பான மிகவும் நுனுக்கமான தொழில்நுட்ப முறைகளின் மூலம் விளக்கினர்.

மேலும் இப் பயிற்சிகளுக்கு சிறந்த உதாரணமாக தீவிர வாதிகளின் பிடியில் அகப்பட்ட பயணிகளை எவ்வாறு மீட்பது தொடர்பான விளக்கத்தையும் விரிவாக செயற்படுத்தி காண்பித்தனர்.

அந்த வகையில் கடந்த செவ்வாய்க் கிழமை திருகோணமலைப் பிரதேசத்தில் இடம் பெற்ற இப் பயிற்ச்சிகளில் வெளிநாட்டு பிரதிநிதிகள் 69பேர் கலந்து கொண்டு இப் பயிற்ச்சி நடவடிக்கைப் பணிகளைப் பார்வையிட்டனர்.

இதன் போது கூட்டுப் படை நடவடிக்கை பயிற்ச்சியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ,இராணு பயிற்ச்சித் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்தின உள்ளடங்களான பல இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | GOLF NIKE SHOES