Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2017 15:56:30 Hours

இராணுவ பயிற்சி பணிப்பாளர் சூடான் இராணுவ அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்திற்கு அழைப்பு

சூடான் இராணுவத்தின் கூட்டுப்படைப் பயிற்சியின் மேஜர் ஜெனரல் இஸம் முகமட் ஹசன் கரோர் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சூடான் பிரதிநிதிகள் (18) ஆம் திகதி திங்கட் கிழமை காலை இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

அதன் பின்பு சூடானின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ பதவி நிலை பிரதானி பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை கலந்துரையாடினார்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட இந்த சந்திப்பின் போது பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை விசாரித்து இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட சர்வதேச பாத்திரங்களைப் பற்றி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களுக்கு விளக்கினார்.

சூடான் பிரதிநிதிகளான கூட்டுப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இசம் முகமட் ஹசன் ஹரோர்,பிரிகேடியர் அசாட் முகமட் ஹசீப் குபாரா,பிரிகேடியர் ஒஸ்மான் இஸ்மயில் சிரக் இட்ரிஸ் மற்றும் கேர்ணல் டெரிக் மொக்டர் முகமட் இளமின் உள்ளடக்கப்பட்ட குழுவினர் வருகை தந்தனர். இவர்களுக்கு நினைவு சின்னங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதன் பிற்பாடு கேர்ணல் ஷியான் மொலிகொட அவர்கள் தமது கலந்துரையாடலை பதவிநிலைப் பிரதானி அவர்களின் காரியாலயத்தில் மேற்கொண்டார்.

பின்னர் இப் பிரதிநிதிகள் இராணுவ பயிற்சிப் பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். மேலும் இக் கலந்துரையாடலில் பயிற்சிப் பணியகத்தின் கேர்ணல் எஸ் கஸ்துாரிமுதலி மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் எம் எஸ் கே சல்காது போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Buy Kicks | Nike