15th September 2017 15:42:10 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கொழும்பு பேராயரான வணக்கத்திற்குரிய பங்கு தந்தை ஆர்.டி. மல்கம் ரஞ்சித் அவர்களை அவரது பணிமனையில் சந்தித்தார்.
இவ் வேளை மக்களிடையே நல்லிணக்கத்தையும் நல்ல உறவுப் பாலத்தையும் உறுவாக்கும் வகையில் வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பாக இராணுவத் தளபதியவர்கள் விபரித்தார்.
இதன் போது இராணுவம் மற்றும் பொலிஸ் படையினரால் முன்னெடுக்கப்படும் நலன்புரி சேவைகள், இடம் பெயர்ந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டங்கள், பாடசாலை சிரார்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள், மூக்குக் கண்ணாடிகள், மருந்து வகைகள்,பாடசாலை கட்டிட நிர்மானத்திற்கு தேவையான கட்டிட கட்டுனர்கள், கற்பினித் தாய்மார்களுக்கான வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற பலவாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் போது பேராயர் அவர்கள் இராணுவத்தின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இராணுவத் தளபதியவர்கள் பரிசுப் பொருட்களை பேராயர் அவர்களுக்கு வழக்கினார்.
Authentic Sneakers | Men’s shoes