Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2017 21:37:36 Hours

திருக்கோணமலை இராணுவ படைச் செயற்பாட்டு திட்டமிடல் பாடசாலைக்கு புதிய வசதிகள்

திருக்கோணமலையில் அமைந்துள்ள இராணுவ படைச் செயற்பாட்டு திட்டமிடல் பாடசாலைக்கு புதிய வசதிகள் மேற்கொண்டதன் நிமித்தம் இப்பாடசாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் இந்திரஜித் வித்யானந்த அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக் கிழமை (14) ஆம் திகதி இப் பாடசாலைக்கு வருகையை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்று இப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடம், கனனி விஞ்ஞான கூடம் மற்றும் அச்சுப் பிரிவு உத்தியோகபூர்வமாக இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு இராணுவ தளபதியினால் இவரது வருகையை நினைவு படுத்தி இராணுவ பாடசாலை வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ தளபதியினால் அந்த முகாமில் உள்ள அனைவருக்கும் இந்த பயிற்சி தொடர்பான முக்கியமான விளக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான கருத்தை இராணுவத்தினர் மத்தியில் உறையாற்றும் போது ஆற்றினார். பின்பு இப் பாடசாலை குழுப் புகைப்படத்திலும் இராணுவ தளபதி இணைந்திருந்தார்.

இந் நிகழ்விற்கு இராணுவ பிரதான பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, இராணுவ பயிற்சி படைத் தளபதி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன, 22ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உட்பட் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

latest Running Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!