Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2017 21:10:01 Hours

கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கைகளிற்கு உயர் அதிகாரிகள் வருகை

2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கையானது பலவாறான முக்கிய தொழில்நுட்பங்களுடன் திருகோணமலை குச்சவேலி பிரதேசத்தில் இவ் இணைப் பயிற்ச்சி நடவடிக்ககை வியாழக் கிழமை (14) நடைபெற்றது.

அந்த வகையில் இப் பயிற்சியின் முதல் நடவடிக்கை கூட்டுப் பயிற்சியானது கடந்த 03ஆம் திகதி செப்டெம்பர் மாதம் மின்னேரியப் பிரதேசத்தில் இடம் பெற்றது.

இதன் போது இப் பயிற்ச்சி நடவடிக்கைகளின் போது எதிரிகளைத் தாக்கும் விதங்கள் பற்றி விபரித்து காண்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் மின்னேரியப் பிரதேசத்தில் இடம் பெறும் இக் கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கையானது கிட்டத்தட்ட கடந்து மூன்று கிழமைகளாக இடம் பெறும் இக் கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளது.

இப் பயிற்ச்சிகளின் போது இராணுவ கலாட் படையணியைச் சேர்ந்த 2018 . 370 கடற் படை படையினர் , 197 விமானப் படையினர் இணைக்கப்பட்டதுடன் இந் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோக்கில் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 69 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து.

அதே வேளை இராணுவத் தளபதியவர்களின் அழைப்பை ஏற்று இப் பயிற்சிகளின் 8ஆவது பயிற்ச்சி நடவடிக்ககைளை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்தின ,பாதுகாப்பு அமைச்சின் பதவிநிலைப் பிரதானி அட்மிரால் சி விஜேகுணர்த்தின போன்ரோர் இன்று காலை (14) வருகை தந்திருந்தனர்.

இப் பயிற்ச்சிகளின் போது எதிரிகளின் முகாமினைத் தாக்கும் விதம் பற்றிய ஓர் செயற்பாட்டை கொமாண்டோ மற்றும் விசேடப் படையினர் ,கடற் மற்றும் விமாப் படையினரின் ஒத்துழைப்புடன் MI 24 மற்றும் மிக் போன்ற போர் விமானங்கள் மற்றும் கடற் போர்க் கப்பல்கள் போன்றவற்றின் தாக்குதல் பயிற்சிகளும் விபரித்துக் காண்பிக்கப்பட்டது.

இப் பயிற்சிகளின் போது விசேட பாதுகாப்பு படைகளின் சங்கமத்துடன் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதங்கள் பற்றிய தௌிவான எண்ணக்கரு இங்கு முக்கியப்படுத்தி காண்பிக்கப்பட்டது.

இந் நடவடிக்கைப் பயிற்ச்சிகளின் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இப் பயிற்ச்சிகள் விசேட நடவடிக்கைகளின் போது எதிர் கொள்ளும் விதம் பற்றிய தௌிவானதோர் விளக்கத்தை அளிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இப் பயிற்ச்சி நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

இப் பயிற்சியானது இம் முறை பலவாறான புதிய தொழில்நுட்ப விடயங்களை கையாளும் விதங்கள் பற்றிய தௌிவினை ஏற்படுத்தும் ஓர் கூட்டு நடடிக்கைப் பயிற்ச்சியாக காணப்படுகின்றது.

அதேபோன்று கடற் படை நடவடிக்கைகள் ,இரவு நேர நடவடிக்கைகள் ,விசேட படைகளின் நடவடிக்ககைகள் ,கொமாண்டோ படையினரின் நடவடிக்கைகள் மற்றும் GISநடவடிக்கைகள் போன்றன விபரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இராணுவ பயிற்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய மற்றும் இராணுவ பயிற்சிகள் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்தின போன்றௌர் சமூகமளித்தனர்.

இக் கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்கைகளில் பணிப்பாளர்களாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பிரதி பணிப்பாளர்களாக பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா ,பிரிகேடியர் நிஷாந்த ஹேரத் ,பிரிகேடியர் உதித் பண்டார ,கேர்ணல் சந்திர ஜயவீர ,கேர்ணல் சுஜீவ ஹெட்டியாராச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ரோர் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நடவடிக்கைகளின் போது கண்காணிப்பு . ஊடுருவல் , மீ;ட்புப் பணிகள் மற்றும் நகர சண்டை போன்றன நடவடிக்கை முறைகள் தௌிவாக காண்பிக்கப்பட்டது.

மேலும் இப் பயிற்ச்சி நடவடிக்கைகள் இலங்கை கடற் படை மற்றும் விமானப் படை போன்றவற்றிற்கு போரின் போதும் மற்றும் ஏனைய நிலைமைகளின் போதும் தமது படைகளைத் தயார்படுத்துவதற்கு ஏற்ற விதத்தில் இப் பயிற்சி முறைகள் அமைந்துள்ளது.

அதேபோன்று இப் பயிற்ச்சி நடவடிக்கைகளில் பங்களாதேஷ் ,சீனா,இந்தியா ,சூடான் ,மாலைதீவூ ,நேபாளம் ,பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதே வேளை இராணுவத் தளபதியவர்கள் இந் நடவடிக்கைகள் தொடர்பான தௌிவான விளக்கத்தையூம் இதன் முக்கியத்துவத்தையும் இப் பயிற்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விபரித்தார்.

அதேபோன்று இவ் விசேட பயிற்ச்சி நடவடிக்கைகள் ஓர் முக்கிய எடுத்துக்காட்டாக அமைகின்றது எனலாம்.

அதே போன்று இவ்வாறான பயிற்ச்சிகள் இராணுவ நாட்காட்டியில் வருடந் தோரும் இடம் பெறுகின்ற ஓர் முக்கிய நடவடிக்கைப் பயிற்ச்சியாகக் காணப்படுகின்றது.

இக் கூட்டுப் பயிற்ச்சி நடவடிக்ககையானது உலகலாவிய நாட்டின் பாதுகாப்பை கருதி இடம் பெறுகின்ற பயிற்ச்சி நடவடிக்கையாக காணப்படுகின்றது.

அதேபோன்று இப் பயிற்ச்சிகளின் இறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வூ எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை (24) மின்னேரிய நடவடிக்கைகள் தலைமையகத்தில் இடம் பெறும்.

latest jordan Sneakers | Nike for Men