Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2017 05:47:30 Hours

இலங்கை இலேசாயுதக் காலட் படையணி “வர்ண இரவு”நிகழ்வு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாயக்க அவர்களின் தலைமையில் இலங்கை இலேசாயுதக் காலட் படையணித் தலைமையகத்தை முன்னிலைப்படுத்தி “வர்ண இரவு”நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை (12) பாதுகாப்பு படை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுதக் காலட் படையணியைச் சேர்ந்த 153 படை வீரர்களும் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி மற்றும் இப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் முதல் கட்ட அங்கமாக போரின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வில் சிறந்த விளையாட்டு வீரர்களான 80 வீரர்களை கௌரவிக்கும் முகமாக பல விருதுகள் வழங்கும் நிகழ்வும் இராணுவத் தளபதியவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அதே வேளை தேசபக்கதி கீதங்களை கோப்பிரல் ஆர் எம் கே கே ஆர் வீரசிங்க இசைத்ததுடன் இப் படையின் சிறந்த அங்கவீனமுற்ற விளையாட்டு வீரராக லான்ஸ் கோப்ரல் ஈ ஏ என் டில்ஷான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த வகையில் இப் படையணி 126ஆண்டு காலமாக இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் பல திறமையான விளையாட்டு வீரர்களை வழங்கியுள்ளது.

இந் நிகழ்வை பல இன்னிசை நிகழ்வுகளும் கண்கவர் வர்ணங்களில் பல வாரான நிகழ்வுகளும் வர்ணமயப்படுத்தின.

இந் நிகழ்வில் முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் சாந்த கோட்டேகொட அவர்களும் கலந்து கொண்டதுடன் இப் படையணியின் சேவா வணிதா சங்கத்தின் தலைவியான திருமதி தனன்ஜனி கருணாசேகர போன்றோர் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online