Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

17th August 2017 15:10:07 Hours

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 28ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் இன்று காலை (17) பதவியேற்றார்.

அந்தவகையில் இராணுவத்தின் முன்னய பிரதி பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் ரேணக வி உடவத்த அவர்களின் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது இவர் தமது புதிய காரியாலயத்தில் கையொப்பமிட்டு மத அனுஷ்டானங்களுக்கமைவாக விளக்கேற்றி தமது கடமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் ,உயர் அதிகாரிகள் மற்றும் பல படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் இலங்கை இராணுவத்தின் கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த இவர் இப் படையணியில் கேர்ணல் பதவியை வகித்ததுடன் ,முல்லைதீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் தளபதியாகவும் சேவையாற்றியுள்ளார்.

இவர் தியத்தலாவை இராணுவ கெடெட் அதிகாரிகள் அக்கடமியில் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி , 18 ஆவது இராணுவ அதிகாரிகள் பயிற்றுவிப்பு பிரிவில் இணைந்து இராணுவப் பயிற்ச்சியை நிறைவு செய்ததுடன் 1984ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 27ஆம் திகதி 2ஆம் லெப்டினாக வெளியேறி இலங்கை இராணுவ கெமுனு காலாட் படையணி(நிரந்தரப் படையணி) யில் இணைக்கப்பட்டார்.

மேலும் இவர் கந்தானை டி மெசனட் கல்லுாரியில் தமது கற்கை நெறியை நிறைவு செய்ததுடன் ,இவரது 30வருடகால இராணுவச் சேவையில் பலவாறான உயர் பதவிகளை வகித்துள்ளார்.

அந்த வகையில் இவர் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பயிற்சிகள் பணியகத்தின் உயர் பதவி வகித்ததுடன் , 521ஆவது இராணுவப் படைப் பிரிவில் பிரிகேட் மேஜர் ஆகவும் , இராணுவ உளவியல் நடவடிக்கையின் பணிப்பாளராகவும்,இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளராகவும் ,இராணுவ நடவடிக்கைகள் பணியத்தின் பணிப்பாளராகவும் ,கடமையாற்றியுள்ளார்.

அதேபோன்று இராணுவ கொத்தலாவளைப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரியாக மற்றும் விரிவுரையாளராக கடமையாற்றியதுடன் மாதுருஓயா இராணுவ பயிற்றுவிப்பு கல்லுாரியின் தளபதியாகவும் சேவைபுரிந்துள்ளார்.

அத்துடன் இவர் கூடைப் பந்தாட்டப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கியதுடன் 5ஆவது மற்றும் 8ஆவது இலங்கை இராணுவ கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் , 533 மற்றும் 512ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகவும் , 23 , 65 மற்றும் 54ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரியாகவும் , முல்லைத் தீவு இராணுவத் தலைமைக்த்தின் தளபதியாகவும் கடமையாற்றியதுடன் தற்போது இராணுவத்தின் பிரதி பதவிநிலை பிரதானியாக கடமையாற்றுகிரார்.