Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th August 2017 16:38:32 Hours

முப்படையின் பங்களிப்புடன் மொக் வோர் நடவடிக்கைபயிற்ச்சி ஆரம்பம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மெய்யான அல்லது கற்பனைப் புலக்காட்சிகளினுடாக வெளிக்கொனரப்படும் நடவடிக்கை பயிற்ச்சி மொக் வோர் எனும் தலைப்பில் திருகோணமலை குரங்கு பாலத்திலுள்ள , 4ஆவது விசேட படைப் பிரிவின் தலைமையகத்தில் இம்மாதம் கடந்த 10 முதல் 11ஆம் திகதிகளில் நடைபெற்றது.

அந்த வகையில் இந்த நடவடிக்கையானது 22ஆவது இராணுவப் படைத் தலைமையகத்தின் முன்னய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

அந்த வகையில் இப் பயிற்சியானது அதிகாரிகளிகளுக்கு எவ்வாறான சூழ்நிலையின் போதும் தனித்து முகம் கொடுக்கக் கூடிய மனத் திடனை அளிக்கும் முகமாக வழங்கப்படும் பயிற்ச்சியாக இது கருதப்படுகின்றது.

அந்த வகையில் இப் பயிற்ச்சியில் மிக நுனுக்கமான அனுகுமுறைகளான பயனுள்ள செயலாக்க தீர்மானங்களை எடுத்தல் , அவற்றை வலுப்படுத்தல் , திட்டமிடல் அத்துடன் மேலும் பல பயனுள்ள விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டன.

அந்த வகையில் இராணுவ நடவடிக்கைகளின் போது மிக சிறந்த பயனுள்ள விதத்தில் ஓர் கோட்பாட்டு திட்டம் சார்ந்த கற்கை நெறியாக இப் பயிற்ச்சி அமைகின்றது. அந்த வகையில் இப் பயிற்சியில் கொமாண்டோ படையினர் , விசேட படையினர் மற்றும் எயார் மொபைல் படையினர் போன்ரோர்கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இப் பயிற்ச்சின் முதல் நாள் (10) அங்கமாக சைபர் அச்சுறுத்தல் தொடர்பான கற்பனைக் கண்ணோட்டப் பயிற்ச்சி வழங்கப்பட்டது. இதன் போது முப்படையினரும் இப் பயிற்ச்சியில் கலந்து கொண்டு தமது ஒத்துழைப்பபை வழங்கினர்.

இப் பயிற்ச்சியின் இரண்டாம் நாள் (11) அங்கத்தில் இருபக்க போர்ப் பயிற்ச்சி முறை பயிற்றுவிக்கப்பட்டதோடு முப்படையினருக்கும் இப் பயிற்ச்சி ஓர் புதிய அனுபவத்தை கொடுப்பதாக அமைந்தது.

இந் நிகழ்வில் மிக கூர்ந்த கண்காணிப்பை இப் பயிற்ச்சிகளின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , பிரதி பணிப்பாளரான கேர்ணல் ஜெ எம் சி ஜயவீர 233ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி , கொமாண்டோ மற்றும் விசேட படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கிழக்கின் கடற் படைத் தளபதியான ரியர் அட்மிரால் திரவிஸ் சின்னையா அவர்கள் உள்ளடங்களாக 60 அதிகாரிகள் , கடற் படை அதிகாரிகள் எழுவர் மற்றும் விமானப் படை அதிகாரிகள் ஐவர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Women's Designer Sneakers - Luxury Shopping