Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2017 16:05:04 Hours

இலங்கையில் நடைபெற்ற ஆசியா பசிபிக் நடவடிக்கை கருத்தரங்கு முடிவுற்றது

இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவன ஒத்துழைப்புடன் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற ஒன்பதாவது ஆசியா பசிபிக் அமைதி காக்கும் பயிற்சி மத்திய நிலையத்தினால் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு (3)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது.

'Challenges of Developing a Robust Peacekeeping Mindset' தலைப்பின் கீழ் இரண்டு நாள் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் முதலாம் திகதி செவ்வாய்க் கிழமை 40 வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கலந்து கொண்டு சிறப்புறையை ஆற்றினார். இது வரைக்கும் ஆசியா பசிபிக் சமதான நடவடிக்கை பயிற்சி மத்திய நிலைய கருத்தரங்கின் ஊடாக பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்வதற்கு இது சிறந்த கருத்தரங்காக விளங்கியது. பூகோள சமாதான ஆரம்பம் என்று இந்த கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் தற்போதைய அமைதி காக்கும் நடவடிக்கை விவகாரம் சவால் மற்றும் எச்சரிக்கை போன்ற விபரங்கள் இந்த கருத்தரங்கில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இராணுவ பதவிநிலை பிரதானி கருத்து தெரிவிக்கையில் இந்த கருத்தரங்கின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவு மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமான விடயமாகும். அத்துடன் கொரியா தலைநகரில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் ஆசியா பசிபிக் சமாதான நடவடிக்கை பயிற்சி மத்திய நிலையத்தின் அமைப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசாத் பதிரத்ன இவ்வருட கருத்தரங்கின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் வேண்டு கோளுக்கிணங்க அவூஸ்ரேலியா,பங்களாதேசம்,புருமய,காம்போஜய,சீனா,பிஜி தேசம்,இந்தியா,இந்தோனிசியா,ஜப்பான்,மலேசியா,மொங்ஹொலியாவ,நேபாளம்,பிலிப்பைன்,கொரியா,தாய்லாந்து,வியட்னாம்,நியூசிலான்ந்து மற்றும் இலங்கை கலந்து கொண்டது.

பூகோள சமாதான நடவடிக்கை ஆரம்பம்,பங்களாதேசம் சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம்,இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம்,அமெரிக்க அமைதி காக்கும் நடவடிக்கை திணைக்களம்,சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை முப்படைகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்குகளில் அமைதி காக்கும் கடமைகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த கருத்தரங்குகளுக்கு மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன,இராணுவ பயிற்சி பணிப்பாளர் வி ஜி ரவிப்பிரிய,இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசாத் பதிரத்ன மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Adidas footwear | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE