Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2017 16:00:44 Hours

ஆசியா பசுபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவன படைத் தளபதி கருத்தரங்கு இம்முறை கொழும்பில்

இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம்,பங்களாதேச அமைதி காக்கும் பயிற்சி நிறுவனம் மற்றும் அமெரிக்க பசுபிக் தலைமையகத்தின் கீழ் நாடு பூராக அமைதி நடவடிக்கை ஆரம்பம் எனும் தலைப்பில் கருத்தரங்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக அவர்களது தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

2008ஆம் ஆண்டு பங்களாதேச அமைதி காக்கும் பயிற்சி நிறுவனத்தினால் அறிமுகமாகிய இந்த கருத்தரங்கு ‘Challenges of Developing a Robust Peacekeeping Mindset’ எனும் தலைப்பில் இம்முறையும் இடம்பெறும். இம்முறை ஆசியா பசுபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி மத்திய நிலையத்தின்(APPTCCC) ஒத்துழைப்பு இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் (AAPTC)கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசாத் பதிரனைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை இராணுவம் 2004ஆம் ஆண்டு தொடக்கம் அமைதி காக்கும் படையணி பயிற்சிக்காக இணைந்துள்ளனர். இது வரைக்கும் இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தினால் அமைதி காக்கும் படை வீரர்கள் 28,998 பேர் பயிற்சியடைந்துள்ளனர். அத்துடன் 19,395 பேர் அமைதி காக்கும் கடமைகளுக்காக ஈடுபட்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கிற்கு ஆசியா பசுபிக் வலயத்தை பிரதிநிதித்துவ படுத்தி அவுஸ்ரேலியா,பங்களாதேசம் ,புருமை,காம்போஜய,சீனா,பிஜிய,இந்தியா ,இந்தோனிசியா,ஜப்பான்,மலேசியா,மொங்கோலியா,நேபாளம்,நியுசிலாந்,பிலிப்பீன்,கொறியா,சீனாஅரசு,தாய்லாந்,வியட்னாம் மற்றும் இலங்கை உட்பட நாடுகளை பிரதிநிதித்துவ படுத்தி 40 பேர் கலந்துள்ளனர்.

ஆசியா பசுபிக் சமாதான நடவடிக்கை பயிற்சி மத்திய நிலைய அங்கத்தவர்களது ஒருங்கினைப்பை மேம்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்காகும். இந்த கருத்தரங்கிற்கு பொது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன,பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிபிரிய,அமைதி காக்கும் நடவடிக்கை நிறுவனத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசாத் பதிரன மற்றும் இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

latest Nike Sneakers | Sneakers