Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2017 16:37:17 Hours

புதிய இராணுவத் தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது இராணுவத் தளபதி பதவியினை பொறுப்பேற்றதன் நிமித்தம் செவ்வாய்க் கிழமை (11) திகதி காலை மேன்மைதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் சந்தித்தார்.

இதன் போது கௌரவமிக்க ஜனாதிபதியவர்களால் பாராட்டுக்களும் நல்ஆசீகளும் புதிய இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத்தளபதியவர்களால் மேன்மைதகு ஜனாதிபதியவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும் இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியவர்களால் 300 இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக இடம் பெற்ற உரையாடலின் போது நாட்டின் அபிவிருத்திக்காக இராணுவத்தின் முழுஒத்துழைப்பினை வழங்குவதாக மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்களிடம் கூறியுள்ளமையினை தெரிவித்தார்.

மேலும் இவர் கருத்து தெரிவிக்கையில் வேகமாக மாற்றமடையூம் சமூகத்தில் தேசிய நல்லினக்க மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் சமூகத்தில் ஏற்படுகின்ற அபிவிருத்தி தொடர்;பான பிரச்சினைகளுக்கு இராணுவத்தினால் நிவர்த்தி செய்யக் கூடிய விதத்தினைப் பற்றி மதிப்பிற்குறிய ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.

அந்த வகையில் 1/3 பங்கினை இராணுவ நடவடிக்கைகளுக்காகவூம் 1/3 பங்கினை தேசிய அபிவிருத்திக்காகவூம் 1/3 பங்கினை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இருப்பதாக மதிப்பிற்குறிய ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.

Sports brands | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival