Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2017 13:11:04 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியினரின்; கரைப் பந்து மற்றும் கூடைப் பந்து போட்டிகள் 2017

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2017 –படைத் தலைமையகங்களின் கரைப்பந்து மற்றும் கூடைப் பந்து போட்டிகள் ஜுன் மாதம் 23 முதல் 25 வரை பனாகொட இராணுவ விளையாட்டு மைதானம் மற்றும் மாஹரகம தேசிய இளைஞர் மன்ற வளாகத்தினுள் இடம் பெற்றது.

இவ்வாறு இடம் பெற்ற போட்டி நிகழ்வின் இறுதிக்கட்ட நிகழ்வான பரிசளிப்பு விழாவில் பிரதான அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமை பிரதாணியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கலந்து கொண்டார்.

பனாகொட இராணுவ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கூடைப் பந்து போட்டிகளில் 6ஆவது (தொண்டர்) மகளிர் படையணி வெற்றியீட்டியதுடன் 2ஆம் மகளிர் (தொண்டர்) படையணி மற்றும் 3ஆம் மகளிர் (தொண்டர்) படையணி போன்றன மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன.

அந்த வகையில் 6ஆவது (தொண்டர்) மகளிர் படையணி வெற்றியீட்டியதுடன் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாம் இடத்தை மற்றம் 2ஆம் மகளிர் (தொண்டர்) படையணி மூன்றாம் இடத்தினைத் தட்டிச்சென்றுள்ளது.

ஆண்களுக்கான கரைப்ந்தாட்டப் போட்டியில் ஏ குழுவின் கீழ் 13 குழுக்கள் போட்டியிட்டதுடன் இலங்கை பொறியியளாளர் படையணி 1ஆம் இடத்தினையும் கஜபா படையணி 2ஆம் இடத்தினையும் இலங்கை மின்சார மற்றும் பொறியியளாளர் படையணி 3ஆம் இடத்தினையும் தட்டிச் சென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தொண்டர் படையணி மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகளிடையிலான 5 எஸ் திட்டம் தொடர்பான போட்டியில் இராணுவ பிரதான பதவிநிலைக் அலுவலகம் முதலாம் இடத்தினைப் பெற்றதுடன் இந் நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கீழ் சிறந்த தொண்டர் படையணியாக 19ஆவது (தொண்டர்) காலாட்படையணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் 15ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி 2ஆம் இடத்தினையும் 5ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி 3ஆவது இடத்தினையும் பெற்றுள்ளது.

Buy Kicks | nike air speed turf rose gold price per gram