Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2017 19:08:11 Hours

புதிய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏழாவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா (04) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றார். பின்பு படைத் தளபதிக்கு 9 ஆவது சிங்கப் படையணியினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து தலைமையகத்தில் இருக்கும் இராணுவத்தினருக்கு படைத் தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது.இந்த நிகழ்விற்கு படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆவது இலக்க கெடெற் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இரண்டாம் தர லெப்டினன்ட் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார். பின்பு பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதான பதவி நிலை உத்தியோகத்தராகவும், 55 ஆவது படைப் பிரவின் பிரதான பதவி நிலை உத்தியோகத்தராகவூம், 551 ஆவது கட்டளை அதிகாரியாகவூம், 51, 55, 59 மற்றும் 22 ஆவது படைப் பிரிவில் படைத் தளபதியாகவும், இராணுவ தலைமையகத்தில் பயிற்சி பணிப்பாளராகவும், இலங்கை இராணுவ எகடமியின் கட்டளை அதிகாரியாகவும், இராணுவ நலன்புரி பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

Adidas shoes | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD