Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2017 08:54:40 Hours

யாழ் குடாநாட்டில் 2017 கண்காட்சி திறந்து வைப்பு

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகம்தொழில் நுட்பம் மற்றும் மீளாய்வு அமைச்சு இணைந்து தல் அரம்பே கௌசல்ய– 2017 ஆம் ஆண்டு எனும் தலைப்பில் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண வீரசிங்க மண்டபத்தில் கண்காட்சி நிகழ்வினை ஒழுங்கு செய்தது.

இந்த கண்காட்சியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படைப் பிரிவினர்களால் நிர்மானிக்கப்பட்ட கண்காட்சிகள் உள்ளடக்கப்பட்டதுடன் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கு குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரும்பாலான பொது மக்கள் வருகை தந்தனர்.

இந்த கண்காட்சியில் சிறந்த நிர்மாணங்களை முன் வைத்து முதலாவது இடத்தை 2 வது தொண்டர் இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த கோப்ரல் டி.எம்.சி திசாநாயகவும் இரண்டாவது இடத்தை 14 வது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் பீ.பி.டப்ள்யூ திசாநாயகவும், மூன்றாவது இடத்தை 4 வது காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன் எம்.என் கருணாதிலகவும் பெற்று கொண்டனர். இந்த இராணுவ வீரர்களுக்கு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை மீளாய்வு ஆணைக் குழுவின் ஆணையாளர் பேராசிரியர் சி. மகேஸ் எதிரிசிங்க அவர்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, வடக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரால் ஜயந்த டி சில்வா, 51 வது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மர்வின் பெரேரா, 552 வது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அதீப திலகரத்ன, வடக்கு முன் நடத்தல் பிரதேச கட்டளை அதிகாரி பிரிகேடியர் சனத் பெரேரா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்

best Running shoes | Nike