Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2017 11:24:30 Hours

அரநாயகவில் மண்சரிவினால் பாதிப்படைந்தவர்களுக்கு முப்படையினரால் புதிய வீடுகள்

அரநாயக சாமஸ்சர கந்த பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிப்படைந்தவர்களுக்கு முப்படையினர்களினால் செனெஹச கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் 30 புதிய வீடுகள் ஞாயிற்றுக் கிழமை 14ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது பாரமளிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தேசிய கட்டிட நிர்மான நிறுவனத்தின் அனுசரனையூடன் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிர்மாண வேலைகள் சியரா கன்ஸ்டக்ஷன் நிறுவனத்தின் மேற்பார்வையில் முப்படையினரால் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டிட பணிகள் 58 வது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 8 வது சிங்கப் படையணி, 1,6,9 வது இராணுவ பொறியியலாளர் சேவை படையணியினர் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த வீடமைப்பு திட்ட நிர்மாண பணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு, டயலொக் அக்சிஎட்டா பீஎல்சி, அனர்த்த முகாமை நிலையம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் நிதி அனுசரனை கிடைக்கப் பெற்று முப்படைகளது ஒத்துழைப்புடன் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அனுசரனை நிறுவனத்தின் விஷேட அதிதிகள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ வீரர்கள் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Sport media | AIR MAX PLUS