Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2025 15:29:30 Hours

5 வது விஜயபாகு காலாட் படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய 5 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால், 5 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 2025 ஏப்ரல் 22 அன்று அம்பலாந்தோட்டை, பரகமவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.

நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை 581 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஈடபிள்யூஎம்டபிள்யூகேபி அபேரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் உத்தியோகபூர்வமாக பயனாளிக்கு கையளித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.