இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் "தூய இலங்கை" திட்டத்தின் பயிற்சியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி திட்டம் 2025 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடத்தப்படுகின்றது.
அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியின் அறிமுக உரை நடைபெற்றது, அதில் அவர் "தூய இலங்கை" திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யபட்டிருந்த சிறப்பு பயிற்சி குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஆரம்பமாகியது. பயிற்சி அமர்வுகளில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 135 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
“தூய இலங்கை" திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,000 பாடசாலைகளை புனரமைக்கும் திட்டம் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி இலுகோவிட்ட மேமா/ஹோ/இலுகோவிட்ட கனிஷ்ட பாடசாலையில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதிபர் திரு. வசந்த உதயசிறி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் இராணுவத் தளபதி அடிக்கல் நாட்டினார். இது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின் உத்தியோகப்பூர்வ ஆரம்பமாகும்.
மேலும், யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டம் பூநகரின் ஸ்ரீ விக்னேஸ்வரம் கல்லூரியில் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படைகளில் அமைந்துள்ள பாடசாலைகளை தூய்மையாக்கும் திட்டத்தை படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று மேற்கொண்டனர்.
இதேபோல், தூய இலங்கை திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு பாதுகாப்புப் படையின் படையினர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொண்டனர்.
அத்துடன், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி நாரம்மல ருவாங்கிரி மத்திய கல்லூரியில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிரமதான திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 57 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய 10 வது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர், 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு பூசுதல் திட்டத்தை மேற்கொண்டனர்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை' திட்டத்திற்கமைய, 12,500 க்கும் மேற்பட்ட படையினர் 2025 பெப்ரவரி 20 முதல் 2025 மார்ச் 07 வரை 380 பாடசாலைகளில் சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 140 சேதமடைந்த பாடசாலை கட்டிடங்களை புதுப்பித்தல், கூரைகளை சரிசெய்தல், பூச்சு பூசுதல் மற்றும் எல்லை வேலிகளை சரிசெய்தல் போன்றவை அடங்கும். மேலும், அவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுமார் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 3,100 மேசைகள் மற்றும் கதிரைகளையும் சரிசெய்துள்ளனர்.
அத்துடன், 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி உடையார்கட்டிலுள்ள முல்/மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் அப்பிரதேச பொதுமக்களின் பங்கேற்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அதே போன்று, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் (கிழக்கு) பிரதேசத்தில் சிரமதான திட்டத்தை நடாத்தினர்.
நாடு முழுவதும் 1,000 பாடசாலைகளை புனரமைக்கும் நோக்கில், பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ந்தும் இலங்கை இராணுவம் தனது ஆதரவைத் வழங்குகின்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அந்தந்த பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் மேற்பார்வையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு 14,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் உதவியுடன், இத்திட்டம் 2025 பெப்ரவரி 20, அன்று தொடங்கப்பட்டு 2025 மார்ச் 17 ம் திகதி வரை 496 பாடசாலைகளில் மறுசீரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மேலும், இந்த முயற்சியின் கீழ், கூரை பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, சேதமடைந்த பாடசலை வேலிகள் புனரமைக்கப்பட்டன மற்றும் பாதைகள் புனரமைக்கப்பட்டன, மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த அண்ணளவாக 5,500 மேசைகள் மற்றும் கதிரைகள், சுமார் 300 பாடசாலைகளில் தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக சரிசெய்யப்பட்டன.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பாடசாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து இராணுவம் தொடர்ந்து ஆதரவைப் பெற்றுவருகின்றது என்பது குறிப்பிடதக்கது.
2025 பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ‘1000 பாடசாலைகள் புனரமைக்கும் திட்டத்தின்' ஒரு பகுதியாக 500 பாடசாலைகளின் புனரமைப்பு பணிகளை இலங்கை இராணுவம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த பாரிய திட்டம் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவது நோக்கமாகும்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 5,500 உடைந்த மேசை கதிரைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் இராணுவத்தினரால் கிட்டத்தட்ட 300 பாடசாலை கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கூரைகள் பழுதுபார்க்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, பாடசாலைகளின் சேதமடைந்த வேலிகள் பழுதுபார்க்கப்பட்டன, பாடசாலைகளுக்கான பாதைகள் புனரமைக்கப்பட்டன.
உள்ளூர்வாசிகள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவால் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இந்த திட்டத்தின் நிறைவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்த விடயமாகும்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் "தூய இலங்கை" திட்டத்திற்கு 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 2 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 மார்ச் 26 முதல் 2025 மார்ச் 30 வரை அனுராதபுரம் ரயில் நிலையத்தை புதுப்பித்தல் மற்றும் தூய்மைப்படுத்தல் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை விமானப்படை வீரர்கள் மற்றும் இலங்கை ரயில்வே ஊழியர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த திட்டம், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வழிக்காட்டலில் 212 வது காலாட் பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
“தூய இலங்கை” திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரஜைகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீடு 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களால் 2025 ஏப்ரல் 02 அன்று பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்த முயற்சிக்கு இங்கிரிய நிகேதனராமய தர்ம நம்பபான சமாதி வண. மனனே சிறிநந்த தேரர் அவர்கள் நிதியுதவி வழங்கினார். கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஎஸ் ராஜரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர் உதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திற்கமைய "தூய இலங்கை" தேசிய திட்டம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, மாத்தறை மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சேவ் நில்வலா' திட்டம் 2025 மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள நில்வலா ஆற்றின் கரைகள் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் சுத்தம் செய்யப்பட்டன. அதன்படி, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
'சேவ் நில்வலா' திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, நில்வலா கரையோரங்களில் ஒரு மாத கால சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2025 மே 01 ஆம் திகதி வரை தொடரும். இராணுவக் குழு தினசரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி ஆற்றங்கரை இருபுறமும் சுமார் 850 மீட்டர் சுத்தம் செய்யப்பட்டது.
10 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் பிரதான கட்டிடத்தின் புனரமைப்பு மற்றும் வகுப்பறை கட்டிடங்களை பூச்சு பூசுதல் ஆகியவற்றை நிறைவு செய்தனர். புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டன. மேலும் புத்தக நன்கொடை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 பாடசாலை பைகள் விநியோகிக்கப்பட்டன.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கையர்களின் நிதியுதவியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.