29th April 2025 21:54:58 Hours
அரந்தலாவ, மஹாஓயா பகுதியில் தேவையுடைய குடும்பத்திற்கு 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 ஏப்ரல் 28 ம் திகதி சுரகிமு பின்பிம நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு. சந்திரசிறி ஹெட்டியாராச்சி அவர்களின் நிதியுதவியுடன் புதிய வீடு கட்டப்பட்டது.
வீடு திறப்பு நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விட்டு சாவியை பயனாளியிடம் கையளித்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் வீடு திறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.