Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2025 17:57:41 Hours

பங்களாதேஷ் இராணுவக் குழு 2 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி மற்றும் காலி கோட்டைக்கு விஜயம்

14 அதிகாரிகள் மற்றும் 27 சிப்பாய்கள் அடங்கிய பங்களாதேஷ் இராணுவக் குழு, 2025 ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, 2 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

573 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து தூதுக்குழுவை வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, காலி கோட்டையின் வரலாறு மற்றும் 2 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் பணிகள் குறித்து தூதுக்குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.