24th April 2025 16:06:58 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் 34 சிவில் ஊழியர்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சசிதா ஹேவகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.