24th April 2025 10:06:06 Hours
221 வது காலாட் பிரிகேட் படையினர், திருகோணமலை சித்தார்த்த ஆரம்ப பாடசாலையில் பிள்ளைகளுக்கான நலத்திட்ட நிகழ்வை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 221 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் நடாத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.